- by Editor
- 1 month ago
தனுஷ் - ஸ்ரீலீலா இணையும் ‘ஓம்’ திரைப்படம்
-
- by Editor,
- 3 months ago
- in சினிமா செய்திகள்
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகவும் பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும் விளங்கும் தனுஷ் மற்றும் தென்னிந்திய திரையுலகின் இளம் முன்னணி நடிகை ஸ்ரீலீலா முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஓம்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட சிறப்பு செட்டில், படத்தின் முக்கிய பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாடல், தனுஷின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க நடனப் பாடலாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடல் சாய் பல்லவி உடன் இணைந்து உலகளவில் வைரலான நிலையில், அதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய பாடலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தனுஷ் மற்றும் ஸ்ரீலீலாவின் ஆற்றல்மிக்க நடன திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலின் நடனக் கோரியோகிராபி, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஓம்’ திரைப்படத்தில் இந்த கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே உயர்ந்திருந்த நிலையில், பாடல் காட்சி குறித்த தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் அது வேகமாக வைரலாகி வருகிறது.