Thursday, October 8, 2026

60 லட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் அபகரிப்பு


கண்டி, ஈ.எல்.சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள இரத்தினக்கல் பரிசோதனை மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று காலை இடம்பெற்ற துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

கண்டி பொலிஸாரின் தகவல்படி, நேற்று காலை 10 மணியளவில் வாடிக்கையாளர் போல வேடமணிந்து வந்த நபர் ஒருவர், இரத்தினக்கற்களை வாங்குவது குறித்து உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

திடீரென அந்த நபர் தனது கைவசமிருந்த ஒரு வகை திரவத்தை உரிமையாளரின் முகத்தில் வீசியுள்ளார்.

இதனால் உரிமையாளர் நிலைகுலைந்து போன தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர், அங்கிருந்த இரத்தினக்கற்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார்.

திருடப்பட்ட இரத்தினக்கற்களின் பெறுமதி சுமார் 60 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளையன் தப்பியோடும் காட்சிகள் மற்றும் தாக்குதல் நடத்திய விதம் சி.சி.டி.வி. கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட வர்த்தகர் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைத் தேடி விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டியின் பிரதான வீதி ஒன்றில் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

you may also like