- by Editor
- 2 years ago
டில்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த்துக்கு அபராதம்
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். தொடரில் டில்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சம்பியனான சி.எஸ்.கே. அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டில்லி கெபிடல்ஸ் அணி.
அந்த அணிக்கு இந்த சீசனில் இது முதல் வெற்றியாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் பந்து வீச டில்லி கெபிடல்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் தலைவர் ரிஷப் பந்த்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.