- by Editor
- 2 months ago
டாலர் வருவாயில் கைவைக்கும் புதிய சட்டம் - மத்திய வங்கியின் முடிவால் வர்த்தகர்கள் அதிர்ச்சி
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
ஏற்றுமதியாளர்கள் பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை குறைக்கும் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கையில், நாணய மாற்று வீதத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, வெளிநாட்டு நாணய சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வெளிநாட்டு நாணய திரவத்தன்மை பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினர்.
மேலும், இது நாணய மாற்று வீதத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு நாணய விநியோகத்தை அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட தற்காலிக கொள்கை நடவடிக்கை என்றும், சந்தை நிலைமை சீரடைந்தவுடன் தளர்த்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்த முடிவு சந்தை மீதான நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்றும், வெளிநாட்டு நாணய சந்தையில் கூடுதல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, 2026 ஜூன் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஏற்றுமதி வருவாயை இலங்கைக்குக் கொண்டுவருதல் பற்றிய விதிகள்” தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் குழு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ஏற்றுமதியாளர்கள் இலங்கைக்குக் கொண்டுவரும் வெளிநாட்டு நாணய வருவாயை அனுமதிக்கப்பட்ட செலவுகளுக்கே பயன்படுத்த முடியும். மீதமுள்ள தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளின் கீழ் இதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.