Saturday, October 10, 2026

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் திருத்தம்!


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய, மாலை 4 மணிவரையில் மட்டுமே வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில், மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிலையத்தில், வரிசையில் நின்றிருக்கும் சகல வாக்களார்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாலை 4 மணிக்கு பின்னர், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருபவர்களுக்கு வாக்களிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


you may also like