Friday, October 9, 2026

சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸாருக்கு இடமாற்றம்!


சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற இடமளிக்கப்படாது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது மனைவியரின் சொந்த ஊரிலும் கடமையில் ஈடுபடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாது.

இதற்கமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இதற்காக விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளேன்." - என்றார்.


you may also like