- by Editor
- 10 months ago
நீர்கொழும்பு சிறைச்சாலை அமைதியின்மை - விசாரணைக்கு ஜனாதிபதி குழு நியமனம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணைக் குழுவின் செயலாளரும் அழைப்பாளருமான பொறுப்புக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டி. அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கான காரணங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் பிரதான பொறுப்பாகும்.