Friday, October 9, 2026

சென்னை மெட்ரோவில் புதிய கட்டுப்பாடு - உரத்த குரலில் பேசினால் 500 ரூபாய் அபராதம்


சென்னை மெட்ரோ தொடருந்துகளில் பயணம் செய்யும் போது கையடக்கத் தொலைபேசியில் உரத்த குரலில் பேசுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ தொடருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகளின் அமைதியான பயண அனுபவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு மெட்ரோ தொடருந்து இயக்கச் சட்டத்தின் கீழ், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசியில் உரத்த குரலில் பேசுவது, ஸ்பீக்கர் மோட் மூலம் உரையாடுவது, ஹெட்போன் இன்றி காணொளிகளைப் பார்ப்பது அல்லது பாடல்களைக் கேட்பது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, தேவையெனில் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

you may also like