- by Editor
- 1 month ago
சூச்சிப்பாரா அருவி பகுதியில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வயநாட்டில் உள்ள சூச்சிபாரா அருவிக்கு அருகில் வனத் துறையினர் நடத்திய சோதனையில், நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேற்படி சடலங்களை மீட்ட இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதேவேளை, 10 நாள்களுக்கும் மேலாக மக்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் சூரல்மாலா மற்றும் முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 131 பேர் இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம், பொலிஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.