Friday, October 9, 2026

சுவர் இடிந்து வீழ்ந்து இளம் தாய் மரணம்!


வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய இளம் தாய் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் அவரது கணவரும் ஒன்றரை வயது குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

you may also like