Sunday, October 11, 2026

சிறைகளில் தொடரும் கொடூரம் - பழிவாங்கும் அதிகாரிகளுக்கு எதிராகச் சுதேஷ் நந்திமால் ஆவேசம்


றும் பூசா சிறைச்சாலைகளிலும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"வெலிக்கடை சிறைச்சாலையில் அவிஷ்க கயான் என்ற இளைஞர் அதிகாரிகள் நடத்திய தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைச் சிறைக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர் உயிருடன் இருந்தால், உடனடியாக ஊடகங்கள் அல்லது நீதிமன்றம் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி நிரூபிக்க வேண்டும்." என்றும் சுதேஷ் நந்திமால் சவால் விடுத்தார்.

"சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரின் மௌனம் மற்றும் அலட்சியமான போக்குச் சந்தேகத்தை எழுப்புகின்றது. இவ்வளவு பெரிய வன்முறைகளை அமைச்சர் தெரிந்தே மறைக்கின்றாரா அல்லது இதற்கு அனுமதி வழங்குகின்றாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று புதன்கிழமை நீதி அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சிறைச்சாலைகள் துறை இயக்குநருடனேயே பேச்சு நடத்த அனுமதிக்கப்பட்டமைக்கு அவர் அதிருப்தி வெளியிட்டார்.

இந்த வன்முறைகள் நாட்டுக்கும் அரசாசுக்கும் பெரும் கறையை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்த சுதேஷ் நந்திமால், அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு வழங்காவிட்டால், பெருந்திரளான மக்களைத் திரட்டி அமைச்சகத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

you may also like