- by Editor
- 6 months ago
சிங்களத் தலைவர்களின் இன மேலாதிக்க மனோநிலை ஒருபோதும் மாறவேமாட்டாது: சிறீதரன் தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களைத் தமிழ் மக்கள், சிங்களத் தலைவர்களுக்குப் பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றைச் சரிவரப் பயன்படுத்த முன்வராமைக்கு, இனமேலாதிக்க மனோநிலையே காரணம். அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விதிவிலக்கல்ல."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கெளதாரிமுனை மக்களை நேற்று சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ப்பிலும் கலந்துரையாடும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளதை மேற்கொள்காட்டி கருத்துரைத்த சிறீதரன் எம்.பி., "தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லை. சிங்களத் தலைவர்கள் ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த நினைக்கும் மனோநிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவைக்குச் சாத்தியமேயில்லை" - என்றார்.