- by Editor
- 2 years ago
சற்றுமுன் : நாடாளுமன்றத்தில் பதற்றம்: சபை ஒத்திவைப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நாடாளுமன்றத்தில் சற்று பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. வற்வரி தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், சபையை கொண்டு நடத்துவதற்கு தேவையான உறுப்பினர்கள் இன்மையால், கோரம் கேட்கப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பண்டார, சபையில் கோரமில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோரமணி ஒலிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், ஆளும் தரப்பின் பக்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சபையில் கோரம் இன்மையால், பாராளுமன்றத்தை நாளை திங்கட்கிழமை (11) காலை 9.30 வரையிலும் ஒத்திவைப்பதாககூறி, அக்கிராசனத்தில் இருந்து பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எழுந்து சென்றுவிட்டார்.