- by Editor
- 1 month ago
சரத் பொன்சேகாவின் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் தடையுத்தரவு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
14 நாள்களுக்கு அமுலாகும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் இராணுவத்தளபதி தயாரத்நாயக்க தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.
அதனடிப்படையில், நியாயமற்ற முறையில் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கவும், கட்சி உறுப்புரிமை மற்றும் தாம் வகிக்கும் பதவிகளை இடைநிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.