Friday, October 9, 2026

சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்


சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலிருந்து 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பைக் கோரியே நாடளாவிய ரீதியில் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்று அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரச சேவைகள் எனப் பல சேவைகளின் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

you may also like