Friday, October 9, 2026

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம்


சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று (08) இடம்பெற்றது.

பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற கையொப்பமிடும் நிகழ்வில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் இந்த கையொப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may also like