- by Editor
- 5 months ago
சனத் நிஷாந்தவின் மெய்ப் பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மெய்ப் பாதுகாவலர் பொலிஸ் இன்ஸ்பெக்டராகத் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கமைய இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.