Wednesday, October 7, 2026

தமிழகத் தேர்தல் களம் அதிர்கிறது - ஆரம்பகட்ட முடிவுகளில் தவெக அதிரடி முன்னிலை


தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று (4) காலை முதல் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பின்னர், இன்று தொடங்கிய எண்ணிக்கை நடவடிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9 மணி நிலவரப்படி வெளியான ஆரம்ப கட்டத் தகவல்களின் படி, சில தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உட்பட செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்ட வேட்பாளர்கள் சில தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக ஆரம்ப நிலவரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவைச் சேர்ந்த 31 அமைச்சர்கள் சில தொகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை அனைத்தும் ஆரம்ப கட்ட நிலவரங்கள் மட்டுமே என்பதையும், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் மாற்றமடைய வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

you may also like