- by Editor
- 2 years ago
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ஒய்.எஸ். சர்மிளா அறிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
தெலுங்கானாவில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.