Monday, October 12, 2026

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை


சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் சில விருதுகள் மற்றும் கௌரவ நாமங்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறான பெயர்களில் சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்துக்கு அறிய கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் தேசிய விருதுகளுக்காக பயன்படுத்தப்படும் கௌரவ நாமங்களை வேறு தரப்பினர் தவறாகஒ பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முறையற்ற விதத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றமை இதுவரையில் இலங்கையில் கௌரவிப்புக்கு பாத்திரமானவர்களுக்கு செய்யும் அநீதியாகவும் அவமரியாதையாகவும் அமைவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான செற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

you may also like