Wednesday, October 7, 2026

சச்சினின் சாதனையை எட்டினார் விராட் கோலி!


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 49ஆவது சதம் இதுவாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

you may also like