- by Editor
- 4 months ago
கொழும்பு மாநகர சபை மேயரை நியமிக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு: சாகர கருத்து!
கொழும்பு மாநகர சபைக்கு மேயரை நியமிக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு: சாகர கருத்து!
கொழும்பு மாநகர சபைக்கு மேயர் ஒருவரை நியமிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் மேயரை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியே (SJB) அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, எனவே மேயர் பதவிக்கு ஒரு பெயரை பரிந்துரைக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.
இருப்பினும், இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபர் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படாதவராகவும் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காதவராகவும் இருக்க வேண்டும் என்று. சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.