- by Editor
- 1 year ago
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி!
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (29) போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
பெங்களூரில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.