Tuesday, October 13, 2026

'கிராம மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையினை வழங்குவோம்'


கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கிராமப்புற இந்தியா திருவிழா 202 ஐ பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி வைத்தார். கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா 9 ஆம் திகதி வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

“கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். கடின உழைப்பு இருந்தபோதிலும், குறைந்த வளங்கள் காரணமாக கிராம மக்கள் பெரும்பாலும் வாய்ப்புகளை அணுக போராடுகிறார்கள்.

2014 முதல், ஒவ்வொரு கணமும் கிராமப்புற இந்தியாவுக்குச் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே எனது அரசின் முன்னுரிமை. கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது, இடம்பெயர்வதைத் தடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவது என்பதே எங்கள் பார்வை.

இதை அடைய, ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் செயல்திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் கிராம மக்கள் அதிகாரம் பெற வேண்டும், கிராமத்திலேயே முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன."- என்றார்.


you may also like