- by Editor
- 2 years ago
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய தொழிற்துறை திட்டமிடல் - பிரதமர் ஹரினி கருத்து!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய தொழிற்துறை திட்டமிடல் - பிரதமர் ஹரினி கருத்து!
நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை ஒன்றை எதிர்காலத்தில் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பிரதேச அபிவிருத்தி வங்கியின் 40வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இச்சபை வர்த்தகத் துறைக்கு தேவையான தொழில்நுட்ப, விஞ்ஞான ஆலோசனைகளை வழங்கும் என்றும் கூறினார்.
விழாவில், "RDB Quick App" இணைய வங்கிச் சேவையும், மூன்று நாட்கள் நடைபெறும் விற்பனைக்கூடங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. தபால் திணைக்களம் வெளியிட்ட நினைவு முத்திரை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
சிறிய, நடுத்தர தொழில்முனைவோருக்கு வங்கி வழங்கும் ஆதரவை பாராட்டிய பிரதமர், பெண்கள் கிராமிய வணிகத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றும், வங்கியின் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.