Friday, October 30, 2026

காவி ஆடை விவகாரத்தில் ஞானசார தேரருக்கு அடுத்த விசாரணை நவம்பர் 18


நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா, மகேன் கொபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது முன்வைக்கப்பட்ட காரணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்தது.

தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like