Friday, October 9, 2026

காதலி வெட்டிக்கொலை: காதலன் குத்திக்கொலை


ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய எஸ்.சதுரிகா என்ற யுவதி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை 24 வயதுடைய ஆர்.குமாரசிறி என்ற இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினரால் இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

you may also like