- by Editor
- 2 years ago
காதலிப்பவர்களும், திருமணம் செய்யப் போவோரும் கவனத்திற்கு - மருத்துவர்கள் விடுக்கும் முக்கிய வேண்டுகோள்
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையில் தற்போது சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையான குழந்தைகள் ‘மேஜர் தலசீமியா’ பாதிப்புடன் பிறக்கின்றனர் எனவும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
மரபணு சுமப்பவர்களுக்கு இடையிலான திருமணங்களை குறைப்பதன் மூலம் நோயைத் தடுப்பது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தலசீமியா அதிகமாகப் பதிவாகும் குருநாகல், அனுராதபுரம், ராகம, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான பரிசோதனை திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இரத்தமாற்றம், மருந்துகள் உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்றவை குறைந்தளவிலேயே கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்கள், தலசீலீமியா என்பது மரபணு வழியாக பரவும் இரத்த நோய் என்றும், தொற்றுநோய் அல்ல என்றும் விளக்கியுள்ளனர்.
இரு பெற்றோரிடமிருந்தும் பாதிக்கப்பட்ட மரபணு கிடைக்கும் போது மட்டுமே குழந்தைக்கு மேஜர் தலசீலீமியா ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.