Friday, October 9, 2026

காசா மீதான இஸ்ரேலின் இரவு நேர தாக்குதல்கள்; 80 பேர் உயிரிழப்பு


காசா மீது இஸ்ரேல் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹமாஸ் தரப்பில் வெளியிட்ட தகவலில், நேற்று முன்தினம் ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கடந்த திங்கள் கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 140 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேல் இராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இந்த நிலையில், கடந்த 7 ஆம் திகதி தொடங்கிய காசா - இஸ்ரேல் மோதல் இன்னும் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

you may also like