Wednesday, October 7, 2026

கனடாவின் வர்த்தக உடன்பாட்டிற்கு - ட்ரம்ப் எச்சரிக்கை!


கனடாவின் வர்த்தக உடன்பாட்டிற்கு - ட்ரம்ப் எச்சரிக்கை!

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் திட்டம் அந்த நாட்டுடனான வர்த்தக உடன்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், இதேவேளை கனடாவின் தீர்மானத்தை இஸ்ரேலும் கண்டித்துள்ளது.

கனடாவின் இந்த செயற்பாடு ஹமாசிற்கான வெகுமானம் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு இது காசாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யும் முயற்சிகளிற்கு பாதிப்பு என குறிப்பிட்டுள்ளது.

கனடாவின் இந்த தீர்மானம் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவதற்கு உதவும் என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

you may also like