- by Editor
- 2 years ago
கண்ணீரில் மூழ்கிய உடுத்துறை!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று வடமராட்சி கிழக்கு அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளுக்காக அஞ்சலித்தனர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பிரதேச செயலர் பிரபாகர மூர்த்தி, யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளர் யோகேஸ்வரி பற்குணராசா, உடுத்துறை கடற்தொழிளாளர் சங்க தலைவர் ஜெயராமன் ஆகியோர் சுடர் ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மலரஞ்சலி செலுத்தினார்.
உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் சுனாமிப் பேரலையால உயிரிழந்த கிட்டத்தட்ட 1200 இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.