- by Editor
- 6 months ago
கண்டி எசல பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (22) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது.
பாரம்பரிய கலாச்சார முறைப்படி பி.ப. 6:28க்கு அமையும் சுப வேளையில் வடக்கு திசையை நோக்கி பெரஹெரா ஆரம்பமாகும்.
ஶ்ரீ தலதா மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள சந்திரவளைவுக்கு பெரஹெராவின் கரடுவை தாங்கிய மங்கல யானை கால் வைக்கும் கணத்திலேயே பெரஹெராவின் பயணம் தொடங்கும்.
தலதா மாளிகை வளாகத்தின் பெருமுன்றலில் இருந்து புறப்படும் பெரஹெரா, தலதா வீதி, யடிநுவர வீதி மற்றும் ரஜ வீதி ஊடாகச் சென்று மீண்டும் தலதா மாளிகை வளாகத்தைச் சென்றடையவுள்ளது.
ஶ்ரீ தலதா மாளிகையின் பெரஹெராவை முன்னிறுத்தி, நாத, விஷ்ணு, கதிர்காமம் மற்றும் பத்தினி ஆகிய நான்கு முக்கிய ஆலயங்களின் பெரஹெராக்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளன.