Saturday, October 10, 2026

கடலில் நீராட சென்ற இளைஞன் மாயம்


யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்

உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக தாளையடி கடற்கரை சென்றுள்ளார்.

கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்

இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து மருதங்கேணி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

you may also like