Sunday, October 4, 2026

கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு! ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு.


கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு! ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கன்னி அமர்வு ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

மேலும், கூட்டம் நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில், முதல் அலுவலாக புதிய மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்ந்தெடுப்படவுள்ளனர்.

நடைப்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் எந்தக் கட்சியும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மாநகரசபை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like