Wednesday, October 14, 2026

கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு


பெந்தோட்டை கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இருவரும் கடலில் நீராடச் சென்ற நிலையில், அலையினால் இழுத்து செல்லப்பட்டதை அடுத்து, அங்கிருந்த உயிர்காக்கும் படையினரும் பொதுமக்களும் இணைந்து அவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பேருவளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

மற்றைய இளைஞர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may also like