Saturday, October 10, 2026

கடன் மறுசீரமைப்பின் போது வெளிப்படைத்தன்மை அவசியம்: அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்


கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பங்கேற்கும் சகல தரப்பினரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநரை இன்று (25) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்குநர்கள் அனைவரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் மத்திய வங்கி ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக, கடன் மறுசீரமைப்பு செயன்முறையை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெறுவதற்கு ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்ட முடிந்தமைக்காக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

you may also like