- by Editor
- 2 years ago
கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் துப்பாக்கிச்சூட்டில் பலி
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு மாளிகாவத்தையில் பீ.சி.சி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் குறிப்பிடப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.