- by Editor
- 2 years ago
ஒபெக் நிதியத்துடன் உடன்படிக்கை: அமைச்சரவை அனுமதி
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்துக்கு இணையாக இலங்கையில் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்கு நிதியளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்குக் அந்த நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த கடன் தொகையைப் பெறுவதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.