Saturday, October 10, 2026

எரிபொருள் விலை ஏற்றம் – விமான சேவைகள் திணறும் நிலை!


மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது.

மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்துப் பேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், "மத்திய கிழக்கு மோதல் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் ஏற்பட்ட விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எமது கால அட்டவணையில் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளோம்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

you may also like