- by Editor
- 1 year ago
பாகிஸ்தான் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து - 15 குழந்தைகள் பலி
-
- by Editor,
- 1 month ago
- in உலக செய்திகள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டும் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டபோது குறித்த பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.