Saturday, October 10, 2026

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்


குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் முன்னதாக கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என கருதி மீளப்பெறப்பட்டது.

இந்தநிலையில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பின்னர் அதில் சில சரத்துக்களை திருத்தங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

you may also like