Saturday, October 10, 2026

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பூட்டு


நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக 1,08,000 நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயலிழந்துள்ளதுடன், பிற காரணங்களால் மேலும் 1,55,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நிறுவனங்களின் தொகைமதிப்பு பட்டியல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தயாரிக்கப்படுவது வழக்கம் என்றும், கடைசியாக அது 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் சுமார் 1.3 மில்லியன் நிறுவனங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது சுமார் 10,37,000 நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக 1,08,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய காரணங்களால் 1,55,000 நிறுவனங்கள் செயலிழந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

you may also like