- by Editor
- 2 months ago
ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்; வாகனங்களுக்கும் தீ வைப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
இதன்போது வீட்டுக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளது.
"திருநங்கைளின் உணர்வுகளைத் தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.