- by Editor
- 1 week ago
'உலக வட துருவ நாடுகள் தோல்வியடைந்துள்ளன'
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
உக்ரைனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், உலகளாவிய வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் பணிகளுக்கு நிதியளிக்க பின்வாங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்தோனேசியா, பாலி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விலேயே ஜனாதிபதி நேற்று இதனை வலியுறுத்தினார்.
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வு நேற்று காலை இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தலைமையில் நடைபெற்றது. இதில் உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இந்தோனேசிய ஜனாதிபதி சிநேகபூர்வமாக வரவேற்றார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
காலநிலை மாற்றத்தால் நீர் மூலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு பாரிய நிதி வசதிகள் தேவைப்படுகின்றன.
காலநிலை மாற்றத்திற்கான நிதியளிப்புத் திட்டங்களுக்கு ஏற்ப உலகளாவிய வட துருவ நாடுகள் துரதிருஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளன. கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு முடிவடைந்த பின்னர், இதற்கான அரசியல் ரீதியான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க வரையறைகளை அவதானிக்க முடிகிறது.
காலநிலை அனர்த்தங்களை பொருட்படுத்ததாத நிலை மேற்குலக நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதன் இறுதி முடிவு நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.
உலகளாவிய வட துருவ நாடுகள், உக்ரேனில் இறப்பு மற்றும் அழிவுக்கு நிதியளிக்க தயாராக இருக்கின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுகளுக்கு நிதியளிப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றார்.