Sunday, October 11, 2026

உலகப்போர் மூளுமா? ஈரானின் அணுஆயுத மையங்கள் உள்ள நகரங்களை குறிவைத்த இஸ்ரேல்


மேற்கு மற்றும் மத்திய ஈரானில் அமைந்துள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் நகரங்களில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், உடனடி பதிலடி தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி, இஸ்ரேல் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்த வேண்டுகோளை மீறி இஸ்ரேல் தனது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

தாக்குதல்களின் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரான் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like