- by Editor
- 2 years ago
உலகக் கிண்ணத்தில் காலிறுதியில் வெளியேறிய நோர்வே அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு
-
- by Editor,
- 2 months ago
- in விளையாட்டு செய்திகள்
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறிய போதிலும், நோர்வே தேசிய கால்பந்து அணிக்கு அந்நாட்டு மக்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து நாடு திரும்பிய அணியினருக்கு, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அரச மாளிகையில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, நோர்வே மன்னர் ஹரால்டை சந்தித்த வீரர்கள், பின்னர் அரச மாளிகைக்கு முன்பாக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
அணியின் நட்சத்திர வீரர்களான எர்லிங் ஹாலாண்ட் மற்றும் சாண்டர் பெர்கே ஆகியோர், வானூர்தி பயணத்தில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ரசிகர்களுடனான இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாமல் முன்னதாகவே அங்கிருந்து புறப்பட்டதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டேல் சோல்பாக்கன் தெரிவித்துள்ளார்.
தோல்விக்குப் பின்னரும் தேசிய அணிக்கு மக்கள் அளித்துள்ள இந்த அமோக வரவேற்பு, விளையாட்டு உணர்வையும் அணிக்கான ஆதரவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக சர்வதேச கால்பந்து உலகில் கவனம் பெற்றுள்ளது.