- by Editor
- 2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சிறப்பு சர்வதேச விசாரணைகள் அவசியம்: சாணக்கியன் கோரிக்கை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சிறப்பு சர்வதேச விசாரணைகள் அவசியம்: சாணக்கியன் கோரிக்கை!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச வழக்கறிஞர்கள் உதவியுடன் சிறப்பு அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும். என்று பாராளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தை முன்வைத்து அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
சுயாதீன விசாரணை மூலம் மட்டுமே பதிலளிக்கப்படாத பல கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய முடியும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் என்றும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை விசாரித்து பதில்களைக் கண்டறிய பெரும் ஆணையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தெளிவான புதுப்பிப்பை பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, ஆறு வருடங்களான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பல அறிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஏன் தாக்கல் செய்யவில்லை? என்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.