Thursday, October 8, 2026

ஈரானில் போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து: 32 பேர் பலி, 16 பேர் காயம்


ஈரானில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியை அண்மித்த கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது.

இதையடுத்து, எதிர்பாராத விதமாக திடீரென இந்த மையத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

you may also like