- by Editor
- 4 months ago
இலங்கை கிரிக்கெட் விவகாரம் ; விசாரணையிலிருந்து விலகினார் தலைமை நீதியரசர்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று விலகியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு அழைக்கப்பட்ட போதே, அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியாயமற்ற விமர்சனங்கள் காரணமாக இந்த விசாரணையில் இருந்து விலகத் தாம் தீர்மானித்தார் என்று தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்த மனு தொடர்பான விசாரணையை வேறு நீதியரசர்கள் ஆயத்துக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.