- by Editor
- 6 months ago
இலங்கையில் எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பா?
-
- by Editor,
- 3 weeks ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போக்கை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த மாதத்தில் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டி.ஏ. ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.